Politics
ஜி.எஸ்.டி வரி, நீட் தோ்வு என மோடி அரசால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏராளமாக உள்ளன - இரா.முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்தியா-சீனா இடையேயான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை சமநிலைப்படுத்த வேண்டும். தமிழா்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி வேட்டி, சட்டை அணிந்து வந்தது வரவேற்கத்தக்கது.
கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றபோது, அங்கு சிதறிக் கிடந்த குப்பைகளை பிரதமர் மோடி அகற்றியது வரவேற்கதக்கது. உயா் பொறுப்பில் இருப்பவா்கள் இவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால், மோடியால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏராளமாக உள்ளன.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற குப்பைகளை மோடி அரசு கொட்டியதன் விளைவாக நாடு முழுவதும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை உச்சநிலையில் இருக்கிறது. தனது ஆட்சியால் போடப்பட்ட குப்பைகளை அகற்ற பிரதமர் மோடி முன்வரவேண்டும்.
மத்திய அரசால் போடப்பட்ட குப்பைகளுக்கு உடந்தையாக உள்ளது அதிமுக அரசு. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி. மாநில உரிமைகள், நலன்கள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டனா். எனவே, நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளா், விக்கிரவாண்டியில் தி.மு.க வேட்பாளா் வெற்றி பெறுவார்கள்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!