Politics

“பொருளாதார வல்லுநர்களை மிரட்டாதீர்கள்; உண்மைகளைக் கேட்கும் மனநிலைக்கு வாருங்கள்” மோடிக்கு சு.சாமி அறிவுரை

பா.ஜ.க ஆட்சியின் தவறான அரசியல் பொருளாதாரத்தை எதிர்கட்சிகள் மற்றும் பொருளதார வல்லுநர்கள் சூட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க எம்.பி-யாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது கொட்டித்தீர்த்து வருகிறார். மோடி அரசுக்கு, பொருளதாரத்தின் அடிப்படைக்கூட தெரியவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். அந்த வகையில் மோடி அரசுக்கு தற்போது ஓர் அறிவுறை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், எடுத்த எடுப்பிலேயே பிரதமர் மோடிக்கு அறிவுறை வழங்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போது “பிரதமர் மோடி, நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உண்மையாக மீட்க விரும்பினால், உங்களுக்கு விருப்பம் இல்லாத உண்மைகளை கேட்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

மேலும்,“அரசு தன்னுடைய பொருளாதார வல்லுநர்களை அச்சுறுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று சமீபத்தில் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து மறைமுக சுட்டிக்காட்டினார். வல்லுநர்கள் உண்மையான பொருளாதாரச் சூழலைச் சொல்வதற்கு அச்சப்படுவது எனக்குப் பயமாக இருக்கிறது.

மேலும், “ பொருளாதார வல்லுனர் கூறும் வாதத்தை முதலில் நேருக்கு நேர் எந்த வித தயக்கம் இன்றி கூறுவதற்கு மோடி ஊக்கப்படுத்தவேண்டும். ஆனால் அதுபோல ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை மோடி இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என தோன்றுகிறது” என்றார்.

பின்னர் பொருளாதார பிரச்சனைக்குறித்து பேசிய சு.சாமி, “தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் தொலைநோக்கு கொள்கை திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை. மோடி இதில் கவனம் செலுத்தாமல், சிறு திட்டங்களில்தான் கவனம் செலுத்துகிறார்.

குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு பெருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மன்கோகன் சிங் கொண்டுவந்தார். மன்கோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது செய்யமுடிந்த நடவடிக்கைகளை பிரதமராக இருக்கும் மோடியால் செய்ய முடியவில்லை.” என்று அந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.