Politics
“அவர் அமெரிக்கா போய் ஆந்திராவுக்கு நல்லது செய்கிறார்... இவர் தமிழகத்துக்கு..?” : பொதுமக்களின் ஆதங்கம்!
கடந்த வாரம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமெரிக்காவுக்கு சொந்த வேலைகளுக்காகச் சென்றிருந்தார். அவரோடு கலந்துரையாடுவதற்காக அமெரிக்க வாழ் ஆந்திர தொழிலதிபர்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அமெரிக்க வாழ் ஆந்திர மக்கள், மாணவர்கள் என பலதரப்பினருக்கிடையே அங்கு உரையாற்றியிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இதையடுத்து டெக்சாஸ் மாநிலத்தின் டாலஸ் நகரில் மற்றொரு பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தப் பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 நபர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி, “நீங்கள் அனைவரும் அமெரிக்காவில் மிக நல்ல வேலைகளில் ஈடுபட்டு, பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் தாய்நாடான ஆந்திராவை முன்னேற்ற சிறந்த திட்டம் இருந்தால் சொல்லுங்கள்... ஆந்திர அரசு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்” என உறுதியளித்துள்ளார்.
இந்த நிகழ்வு பற்றி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க வாழ் தமிழரான சிவா என்பவர், அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதைப்போல ஏதாவது நிகழ்வில் பங்கேற்று தமிழகத்தின் நலனுக்காகப் பேசுவாரா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், இதுபோன்ற எந்த நல்ல நோக்கத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. “தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்” என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நலனுக்காக என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
முன்பு வெற்று விளம்பரச் செலவுகள் செய்து நடத்தப்பட்ட முதல் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகளே இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை.
இந்நிலையில், இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பு அமைச்சர்கள் வெளிநாடு சென்றபோதெல்லாம் செல்லாத முதலமைச்சர், அது முடிந்து ஏழு மாதங்கள் கழித்து தற்போது 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்குப் போவது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!