Politics
கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை.. குமாரசாமி அரசு தப்புமா?
காங்கிரஸ், மதசார்பாற்ற ஜனதா தள கூட்டணியில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை மிரட்டியும், குதிரை பேரம் நடத்தியும் பா.ஜ.க ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் தலைத்தூக்கி உள்ளது.
16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிய கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை முதலமைச்சர் குமாரசாமி தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதனையடுத்து ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் நடைபெற்றது.
விவாதத்தின் போது அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்கு உரிமைக் கோரி அமளியில் ஈடுபட்டதால் அவையை ஜூலை 22ம் தேதிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதன் அடிப்படையில் நாளை கூடவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் நடைபெற பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாளை நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று மாலை பெங்களூருவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். அதேபோல், மும்பையில் தஞ்சமடைந்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் கடைசிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!