Politics
கர்நாடகா,கோவாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குறுக்கு வழியில் நுழையும் பா.ஜ.க: மம்தாவின் திட்டம் என்ன?
ஆபரேஷன் கமலா - கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கியது போல், மேற்கு வங்கத்திலும் தனது வித்தையை தீவிரமாக காட்ட தொடங்கியுள்ளது பா.ஜ.க.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 சீட்டுகளை கைப்பற்றியதை அடுத்து, ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது பா.ஜ.க.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முகுல் ராய், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் இருந்து 107 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே, கர்நாடகா, கோவா மாநிலங்களில் பல்வேறு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி மாற்று கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலை பேசி வரும் பா.ஜ.க மேற்கு வங்கத்திலும் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரை மம்தாவின் எஃகு கோட்டையாக கருதப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மாநில அரசை வீழ்த்துவதில் முனைப்புடன் பா.ஜ.க செயல்படுவது அதன் மேலிட பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!