Politics
ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர 3 வாரமாகும் என்பது வேடிக்கை : கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்றையதினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க கொண்டுவரும் தீர்மானங்களை காங்கிரஸ் கட்சி வரவேற்று ஆதரிக்கும். தி.மு.க - காங்கிரஸ் கட்சிக்கான கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தைத் தடுக்க அரசு எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பூமியில் இருந்து நிலவிற்கு செல்வதற்கு கூட 3 வாரங்கள் ஆகாது, அனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என எடப்பாடி அரசு கூறுவது வேடிக்கையானது.
தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பு இல்லை என முன்பே வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் ஆனால் அதனைச் செய்ய அரசு தவறியுள்ளது. இது ஆளும் அ.தி.மு.க-வின் தோல்வியையே காட்டுகிறது.
மேலும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் விதிமுறைகளை மதிக்கவேண்டும், தற்போது வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!