Politics

2021ல் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார் - ப.சிதம்பரம் உறுதி !

தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றியதை விட பன்மடங்கு சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸார் பணியாற்ற வேண்டும்.

ஆகையால், நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.,வின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியினர் பணியாற்ற வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராவது உறுதி.

மேலும், மக்களவைத் தேர்தலை சிறந்த பாடமாக எடுத்துக்கொண்டு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப வியூகங்களை அமைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ளது போன்று மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி வலிமையுடன் இருக்க வேண்டும்” எனவும் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.