Politics
தமிழகத்தில் பா.ஜ.க-வின் தூதுவராகச் செயல்படுகிறார் கிருஷ்ணசாமி : தென்காசி எம்.பி விமர்சனம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு உதவிபெறும் பள்ளியில், ஏழை மாணவர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் பேனா, பென்சில், நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சித்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராடுவோம் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் இந்தி மொழிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரித்துள்ளது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பா.ஜ.க-வின் தூதுவராக செயல்படுவதாகவும், பா.ஜ.க கூறும் அனைத்திற்கும் ஜால்ரா அடிப்பதாகவும் கிருஷ்ணசாமியை கடுமையாக விமர்சித்தார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!