Politics

மோடியின் புதிய அமைச்சரவை பற்றி தெரிந்து கொள்ள 6 முக்கிய தகவல்கள்!

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மொத்தம் 58 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 25 பேர் கேபினெட் அமைச்சர்கள். 33 பேர் இணை அமைச்சர்களாக பதிவியேற்றனர்.

இந்த புதிய அமைச்சரவையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள சில தகவல்கள்:

1. அமித் ஷா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக அமித் ஷா பதிவியேற்றார். இதனால் அவருக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. நிதியமைச்சகம் அவருக்கு ஒதுக்கப்படாலம் என்று தகவல்கள் கூறுகின்றன.

2. கடந்த முறை கேபினெட்டில் இடம் பெற்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கே.ஜே.அல்போன்ஸ், ஜே.பி.நட்டா, ஜெயந்த் சின்ஹா, உமா பாரதி ஆகியோருக்கு இந்த கேபினெட்டில் இடம் கொடுக்கப்படவில்லை.

3. முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், அமைச்சர்வையில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கொடுக்கப்பட இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்ற செல்ல இருக்கிறார்.

4. இந்த கேபினெட்டில் 3 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன், சிரோன்மணி அகாளி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் ஆகியோர் மட்டுமே பதவியேற்றுள்ளனர். கடந்த மோடி கேபினெட்டில் 7 பெண்கள் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

5. இன்று பதவியேற்ற கேபினெட்டில் குறைந்த வயதுடையவர் ஸ்மிரிதி இராணி (43). அதிக வயது கொண்டவராக ராம் விலாஸ் பஸ்வான் இருக்கிறார். அவருக்கு வயது 72.

6. இந்த அமைச்சரவையில் 20 புதுமுகங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read:

மோடியின் புதிய அமைச்சரவையின் முழு பட்டியல்!

அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை : அப்செட்டில் ஓ.பி.எஸ், கடுப்பில் இ.பி.எஸ்!

அரசு அதிகாரி TO மத்திய அமைச்சர் - மோடியின் ஃபேவரைட் ஜெய்சங்கர்!