Politics
எப்போ ராஜினாமா செய்ய போறீங்க விஜயபாஸ்கர்? - செந்தில்பாலாஜி கேள்வி !
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில், 38 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியும், 13 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று அமோக வரவேற்பை பெற்றுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் திமுக வேட்பாளரான செந்தில்பாலாஜி. 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை தோற்கடித்துள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் கிடைத்துவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜி தற்போது வெற்றிவாகையை சூடியிருக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் பதவியை எப்போது ராஜினாமா செய்ய இருக்கிறீர்கள் என எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தால் தி.மு.க சார்பில் கரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார் என உறுதிபட பேசியுள்ளார்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!