Politics
9 மணி நிலவரம் ; தமிழகத்தில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை !
17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 145 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 84 இடங்களிலும், மற்றவை 65 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 27 இடங்களிலும் அதிமுக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, அ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
Also Read
-
“SIR-ஐ எதிர்த்தது யார்? ஒளிந்தது யார்?...” அம்பலமாகும் தவெக நாடகம்.. - வெளுத்து வாங்கிய ரகுபதி!
-
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கு : கைதிகளை வைத்து தாக்க சொன்ன போலீஸ்... அடுத்தடுத்து அதிர்ச்சி !
-
வாக்கு எண்ணிக்கை வீடியோவை காணவில்லை என எப்படி கூற முடிகிறது? : தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் காட்டம்!
-
“இனி நீதிமன்றங்கள் முன்புதான் மக்கள் போராடுவார்கள்” : சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது என்ன?
-
அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவது ஏன்? : த.வெ.க அரசுக்கு மு.வீரபாண்டியன் கேள்வி!