Politics
வாக்குப்பெட்டிகளை மாற்ற பா.ஜ.க. முயற்சி.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ். அழகிரி அறிவுரை!
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவுக்கே ஆதராவக இருந்தன.
இந்த நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, கருத்துக்கணிப்பு முடிவுகளில் நம்பகத் தன்மையே இல்லை. இதனை பாஜக வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தியுள்ளது என சாடியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இதேப்போல், வெளியிட்டப்பட்ட கருத்துக் கணிப்புகள் முற்றிலும் தவறாகவே அமைந்தது. ஆகையால் கருத்துக் கணிப்பை வைத்து நாடகம் செய்ய திட்டமிட்டிருக்கும் பாஜகவின் செயல் தெளிவாகவே தெரிகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு, வாக்குப்பெட்டிகளை மாற்றி மோசடியில் ஈடுபட பாஜக முயற்சி செய்து வருகிறது. எனவே வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் இரவு, பகல் பாராமல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கே.எஸ். அழகரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை கண்டிராத வகையில், தேர்தல் ஆணையம் முறைகேடாக செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அதிகரித்துள்ள தண்ணீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!