Politics
எடப்பாடி பழனிசாமியை சமூக விரோதி என்று சொன்னாலும் தவறில்லை : முத்தரசன் காட்டம் !
சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பதாக தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை என்னால் தான் கிடைத்தது என்று கூறிக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன போது அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு முயல்வதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் எடப்பாடி பழனிசாமியை சமூக விரோதி என்று சொன்னாலும் தவறில்லை என கூறினார்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!