Politics
சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை!
மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மீது குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மீது விா ரணை நடத்திய தேர்தல் ஆணையம், இன்று (2-ம் தேதி) காலை 6 மணியில் 72 மணி நேரத்துக்கு சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் பிரசாரம் செய்ய கூடாது என தடை விதித்துள்ளது. பா.ஜ.க தலைவர்கள் இது போல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தொடர்கதையாக உள்ளது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!