Politics
தி.மு.க ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் !
தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் கோரம்பள்ளம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து திறந்த வேனில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்த பிரச்சாரத்தின் போது தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“இன்று காலை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண் ஒருவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் எங்கள் பகுதியில் உள்ள நீர் நிலையங்களைத் தூர்வாரி விவசாயத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அடிப்படை வசதிகளை இந்த அரசங்கம் செய்துதரவில்லை எனக் குற்றம் சாட்டினர். நீர் நிலைகளை பாதுகாக்கவும், அடிப்படைத் தேவைகளுக்கும் உள்ளாட்சி செயல்படுத்தினால் போதும். நிச்சயமாக தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
கேபிள் டிவி கட்டணத்தைக் குறைப்போம். தூத்துக்குடி பகுதியில் தீங்கு விளைவிக்காத வகையில் நிறுவனங்கள் தொடங்கி வேலையை உறுதிப்படுத்துவோம். உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். என நம்பிக்கை அளித்தார். எனவே இந்த ஆட்சியின் கொடுமைகளை அகற்ற தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பெருவாரியான வாக்குவித்தியாத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் பகுதியில் வீதி விதியாக சென்று வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் வாக்குசேகரித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!