Politics
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு!
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ,சூலூர், ஒட்டப்பிடாரம் ,ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு மே19 நடைபெற உள்ளது .இந்த நான்கு தொகுதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில் ,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டி 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உண்மையை மறைத்து ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது முற்றிலும் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் ஆகவே வேட்பாளர் முனியாண்டியின் வேட்பு மனுவை நிராகரித்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் பொழுது தேர்தல் ஆணைய விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் ..அப்படி தேர்தல் விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு . திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !