murasoli thalayangam
“தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர்...” - பட்டியலிட்டு Part 2-வை வெளியிட்ட முரசொலி!
முரசொலி தலையங்கம்
04.07.2026
தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர் - 2
13. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அடகுவைத்த 28 சவரன் நகையை திருப்பித் தராமல் கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் த.வெ.க. பிரமுகர் ஜெகதீசன் மீது புகார் தரப்பட்டுள்ளது. எஃப். ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.
14. மதுரை திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரின் உரிமையாளர் த.வெ.க.வைச் சேர்ந்தவர் என்பதே டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
15. நீலகிரி மாவட்ட த.வெ.க. பொறுப்பாளர் ரமேஷ், தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாகவும், வசூலித்த பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.
16. திருச்செங்கோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் த.வெ.க. நிர்வாகி நவீன். அவர் மீது புகார் தரப்பட்டுள்ளது.
17. மனமகிழ் மன்றங்களின் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு பணம் கேட்டு த.வெ.க.வினர் மிரட்டல் விடுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
18. விபத்தில் சிக்கிய கூலித் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரண நிதி பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய சேலம் ராபின் என்பவர் மீது புகார் தரப்பட்டுள்ளது. புகாரை வாபஸ் வாங்கு என்று பெண் ஒருவரை மிரட்டியதாகவும் புகார் ஆகி இருக்கிறது.
19. ஆலந்தூரில் மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக இருந்த பெண்ணுக்கு ஆலந்தூர் வடக்குப் பகுதி த.வெ.க. செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை உடனடியாக காவல் துறை கைது செய்யவில்லை. தலைமறைவான வேம்புலியை ஏழு நாட்கள் கழித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
20. போலி ஜி.எஸ்.டி. எண்களைப் பயன்படுத்தி பண மோசடி செய்ததாக த.வெ.க. நிர்வாகி அருண் மீது ஈரோட்டில் புகார் பதிவாகி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் ஈரோடு எஸ்.பி. அலுவலக வாசலில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
21. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே ஏழாம் வகுப்பு மாணவி மீது பைக்கில் வேகமாக வந்த இருவர் மோதினார்கள். அதில் மாணவி உயிரிழந்துள்ளார். பைக்கில் வந்த இருவரும் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
22. திருவாரூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணிடம் திருத்துறைப்பூண்டி த.வெ.க. ஒன்றியச் செயலாளர் ஆனந்த் அத்துமீறியதாக புகார் ஆனது. ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு அசோக் என்பவரும் கைதாகி இருக்கிறார்.
23. செங்கல்பட்டில் அமைச்சர் சரத்குமார் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை த.வெ.க.வினர் தாக்கி செல்போன்களை பறித்துள்ளார்கள்.
24. சேலம் புதிய பேருந்துநிலைய நடைபாதையில் மாமூல் வசூலிக்கும் 45 ஆவது கோட்ட த.வெ.க. நிர்வாகி முரளியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
25. சைதாப்பேட்டை GEN Z கூட்டத்தில் பேசிய நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க. நிர்வாகிகள் குமாரவேல், ரவி மீது நடவடிக்கை எடுக்க சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
26. ஆத்தூர் அருகே தம்பம்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்ததாக த.வெ.க. நிர்வாகி கார்த்தி கைதாகி இருக்கிறார். இவர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடன் இருக்கும் படம் வெளியாகி இருக்கிறது.
27. சேலத்தில் பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய த.வெ.க. பிரமுகர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாட்டியதும் த.வெ.க.வைச் சேர்ந்தவர் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் த.வெ.க. கட்சி சுவரொட்டிகளில் அவர் படம் பெரிதாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அவர் அக்கட்சிக்காகப் பணியாற்றி இருப்பது அம்பலம் ஆனது.
28. திருப்பூர் மாவட்டம் நொச்சிபாளையம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷ் செபஸ்டியன், பெரியசாமி ஆகியோர் கைதானார்கள். இதில் பெரியசாமி த.வெ.க. உறுப்பினர்.
29. ரேசன் அரிசியைக் கடத்தி வந்து மக்களுக்கு நலத்திட்ட உதவி என்று கொடுத்துள்ளார் மதுரை த.வெ.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டி. இது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
30. கிருஷ்ணகிரி த.வெ.க. எம்.எல்.ஏ. முகுந்தனைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆய்வு என்ற பெயரால் மூன்றாந்தர மனிதர்களுடன் வந்து, தனக்கு தொடர்பு இல்லாத தளி, ஓசூர் தொகுதிகளிலும் அராஜகம் செய்வதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
31. கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் என்று சொல்லி பெட்ரோல் பங்க் ஊழியரை ஒருவர் தாக்கி இருக்கிறார். கேனில் பெட்ரோல் கேட்டுள்ளார் அந்த நபர். ஊழியர் தரவில்லை. ‘அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் நான். எனக்கே தரமாட்டாயா?’ என தாக்கி இருக்கிறார் அந்த நபர். பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
32. த.வெ.க. ஆட்சியில் குட்கா பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனிடம் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் குணசேகரன் புகார் சொன்னார். அப்போது குட்கா வியாபாரிகளுக்கு ஆதரவாக திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.
33. புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் உடன் பின்னால் காரில் வந்த த.வெ.கவினர், எதிரே வந்த காவல் ஆய்வாளர் காரில் மோதினார்கள். இதில் காவல் ஆய்வாளர் உஷா, ஓட்டுநர் சிவா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அமைச்சருடன் 5 கார்களில் வந்தவர்களால் இந்த விபத்து ஏற்பட்டது.
34. முன்னாள் ‘கில்லி’ சரத் – இந்நாள் மாண்புமிகு சரத்குமார், பவுடர் தயாரிக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவை வெளியிட்டதாக தனது பள்ளி நண்பர் சரண் ஜெயக்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ‘தனது வீட்டின் முன் கத்தியுடன் சிலர் நடமாடுகிறார்கள்’ என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார் சரண் ஜெயக்குமார்.
– விஜய் தனது ரசிகர்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கோட்டையில் தூங்கி விட்டார்.
Also Read
-
Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது : அனிதா ராதாகிருஷ்ணன் கைது - எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!
-
“வைகை மீது ஆளுநருக்கு என்ன திடீர் அக்கறை.. தமிழ்நாடு அரசே விழித்துக்கொள்” : கி.வீரமணி எச்சரிக்கை!
-
“கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட்” : ஆர்.எஸ்.பாரதி அதிரடி - முழு பேட்டி இங்கே!
-
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. போலீஸ் ராஜ்ஜியம்.. இந்த ஆணவம் அழிவிற்கு வழி”: மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
-
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது : தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!