murasoli thalayangam

“தேசவிரோதச் செயல்களை ஏன் தடுக்கவில்லை? தடுக்க முடியவில்லை?” : ஒன்றிய அரசுக்கு முரசொலி கேள்வி!

‘டெல்லியில் நடைபெற்றது தேச விரோத சக்திகள் இழைத்த பயங்கரவாதச் செயல்” என்று ஒன்றிய அமைச்சரவைக் குழுக் கூட்டம் சொல்லி இருக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., இத்தகைய தேசவிரோதச் செயல்களை ஏன் தடுக்கவில்லை? தடுக்க முடியவில்லை? என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

பா.ஜ.க. கால பயங்கரப் பட்டியல் என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

பத்து ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியானது மக்களை எப்படிப் பாதுகாத்துள்ளது என்பதற்கான பட்டியல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

‘‘இந்தியாவில் ஆண்மை உள்ள பிரதமர் இல்லாததால் தான் வெடிகுண்டுகள் வெடிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகள் உள்ளே நுழைகிறார்கள்’’ என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பரப்புரை செய்து ஆட்சிக்கு வந்தார் மோடி. அவரது ஆட்சியின் பயங்கர சாதனைப் பட்டியலைப் பாருங்கள்...

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்:

• டிச.28, 2014– பெங்களூரு தேவாலயத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – ஒருவர் பலி, 5 பேர் காயம்.

• மார்ச் 20, 2015– காஷ்மீர் பள்ளியில் குண்டுவெடிப்பு– 6 பேர் பலி, 10 பேர் காயம்.

• ஜூலை 27, 2015– குருதாஸ்பூர் போலீஸ் சோதனைச்சாவடி தாக்குதல்–10 பேர் பலி, 15 பேர் காயம்.

• ஜன 2, 2016– பதன்கோட் விமானப்படை தாக்குதல்–7 பேர் பலி

• ஜூன் 25, 2016– பாம்பூர் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனங்கள் மீது 8 பேர் பலி, 22 பேர் காயம்.

• செப். 18, 2016– உரி ராணுவ முகாம் தாக்குதல்– 23 பேர் பலி

• அக்.3, 2016– பாராமுல்லா தாக்குதல்

• அக்6, 2016– ஹந்த்வாரா ராணுவ தளத் தாக்குதல்

• நவ. 29, 2016– நக்ரோட்டா ராணுவத் தளத் தாக்குதல்–10 பேர் பலி

• ஏப். 24, 2017 சுக்மா நக்சலைட் தாக்குதல்–26 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி.

• மார்ச் 7, 2017– போபால் – உஜ்ஜைன் ரெயில் குண்டுவெடிப்பு– 10 பேர் பலி

• ஜூலை 11, 2017– அமர்நாத் யாத்திரை படுகொலை– 8 பேர் பலி

• பிப்.10, 2018– சுஞ்சுவான் ராணுவத் தளத் தாக்குதல் –11 பேர் பலி

• மார்ச் 13, 2018–சுக்மா குண்டுவெடிப்பு– 9 பேர் பலி

• பிப்.14, 2019–புல்வாமா சி.ஆர்.பி.எப் வாகனங்கள் மீதான தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலி

• மார்ச் 7, 2019–ஜம்மு பஸ் நிலையத்தில் கையெறிக் குண்டுத் தாக்குதல்– 3 பேர் பலி, 30 பேர் காயம்.

• ஏப். 9, 2019– தண்டேவாடா தாக்குதல்–5 பேர் பலி

• மே 1, 2019 – கட்சிரோலி வெடிகுண்டு தாக்குதல்–16 பேர் பலி

• ஜூன் 12, 2019– அனந்த்நாக் தாக்குதல்–5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி

• ஏப். 3, 2021–சுக்மா–பிஜாப்பூர் தாக்குதல்– 22 ராணுவ வீரர்கள் பலி

• ஜூன் 27, 2021–ஜம்மு விமானப்படை தளம் மீதான தாக்குதல்

• ஆக. 27, 2021–அசாம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெப்பு

• ஜன. 1,2, 2023– ராஜவுரி தாக்குதல்கள் – 7 பேர் பலி

• ஏப்.8, 2023–எலத்தூர் ரெயில் தீவைப்பு–3 பேர் பலி

• ஏப். 26, 2023– தண்டேவாடா குண்டுவெடிப்பு–10 போலீசார் உட்பட 11 பேர் பலி

• அக். 29, 2023–கொச்சி கிறிஸ்தவ கூட்டத்தில் தாக்குதல் – 3 பேர் பலி, 36 பேர் காயம்.

• மார்ச் 1, 2024– பெங்களூரு கபே குண்டுவெடிப்பு– 9 பேர் காயம்

• ஜூன் 9, 2024– ரியாசி பஸ் தாக்குதல்– 9 பேர் பலி, 41 பேர் காயம்.

• அக்.20, 2024– ககாங்கீர் தாக்குதல்– ஒரு டாக்டர் உட்பட 7 பேர் பலி

• மார்ச் 28, 2025– கதுவா தாக்குதல்– 4 போலீசார் சாவு

• ஏப், 22, 2025– பஹல்காம் தாக்குதல் – 26 பேர் சாவு

• நவ.10, 2025– டெல்லி செங்கோட்டைத் தாக்குதல்–13 பேர் பலி, 30 பேர் காயம்.

– இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியது யார்? பிரதமரும், உள்துறை அமைச்சரும் அல்லவா?

டெல்லி செங்கோட்டைப் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் அதிகளவில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை குற்றவாளிகள் அதிகளவில் கொள்முதல் செய்தது எப்படி? அதனை சேமித்து வைத்தது எப்படி?

கார் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 2,900 கிலோ வெடிமருந்தைக் கைப்பற்றி உள்ளனர். மேலும் ஏ.கே.ரக துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளனர். 2,900 கிலோ வெடிமருந்து இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது?

45 விழுக்காட்டுக்கு மேல் அமோனியம் நைட்ரேட்டைக் கொண்ட இரசாயனங்களை வெடிபொருட்கள் என ஒன்றிய அரசு 2011 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த வேதிப் பொருளை இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை 2015 ஆம் ஆண்டு அரசு விதித்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தடையில்லாமல் கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

‘டெல்லியில் நடைபெற்றது தேச விரோத சக்திகள் இழைத்த பயங்கரவாதச் செயல்” என்று ஒன்றிய அமைச்சரவைக் குழுக் கூட்டம் சொல்லி இருக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., இத்தகைய தேசவிரோதச் செயல்களை ஏன் தடுக்கவில்லை? தடுக்க முடியவில்லை?

பயங்கரப் பட்டியலை மெடல்களாகத் தயாரித்து மாட்டிக் கொள்ளப் போகிறார்களா பா.ஜ.க. ஆட்சியாளர்கள்?” எனத் தெரிவித்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: டெல்லி குண்டு வெடிப்பு : வாய் கிழியப் பேசினால் போதுமா? அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? - முரசொலி