murasoli thalayangam
“தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தலைநிமிர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
தனக்கென ஒரு இலக்கை வைத்து, அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வில்லாமல் பயணித்து, அந்தப் பயணத்தை விரைந்து நடத்தி, வெற்றியையும் உடனடியாகக் காட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம். அவரது நல்லாட்சி, எந்நாளும் தொடர உழைப்போம் என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
“தலைநிமிர்த்திய முதலமைச்சர்!” என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு :-
தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைநிமிர்த்தி இருக்கிறார் என்பதற்கு இந்த வாரத்தில் மட்டுமே மூன்று. இடங்களில் இருந்து பாராட்டுகள் வந்துள்ளன.
1. இந்திய நாட்டில் தனிநபர் வருமானம் குறித்த புள்ளிவிவரத்தை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் இருக்கிறார். அதில் இந்திய நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள முதலிடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தனிநபர் வருமானம் 2,04,605 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1,93,309 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டைத் தொடர்ந்து அரியானா, தெலங்கானா, மராட்டியம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்திய சராசரியாக 1,14,710 ரூபாய் உள்ளது. இதன்படி பார்த்தால் இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் அதிகம் ஆகும்.
2. நாட்டிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் 2 லட்சத்து53 ஆயிரத்து 334 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
அதிகமான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. அதிகத் தொழிற்சாலைகள் இருப்பதன் மூலமாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.
3. தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை இருப்பதாக ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி சொல்லி இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது இதனைச் சொல்லி இருக்கிறார் அமைச்சர்.
இந்தியா முழுக்க மாணவர் சேர்க்கை விகிதம் குறித்து ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு அமைச்சர் அளித்த பதில் மூலமாக, தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்திய பிறகு இந்தியாவில் பள்ளி இடைநிற்றல் விகிதம் 5.23 விழுக்காடு அதிகம் ஆகி இருப்பதாக ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாணவர் சேர்க்கை அதிகம் என்று அவர் இருக்கிறார். ஏற்றுக்கொண்டுள்ளார்.
– இந்த மூன்று பாராட்டுகளும் ஒரே வாரத்தில் கிடைத்துள்ளன.
தனிநபர் வருமானம் என்பது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல் ஆகும். துறைசார்ந்த கட்டமைப்புகள், பொதுமக்களின் வாழ்க்கைத் தரம், சமூகச் சூழ்நிலைகள், மக்களுக்கு அரசு வழங்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள் ஆகியவை சார்ந்தது ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் உயர அரசின் செயல்பாடுகளே முக்கியமான காரணிகளாக அமைந்துள்ளன.
தொழில் துறையில் ஏற்படும் புரட்சிகள், உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகள், தமிழ்நாட்டை நோக்கி அதிகமான நிறுவனங்கள் வருவது, அனைத்து துறைகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம், அனைத்து மாவட்டங்களுக்கும் நகரம், கிராமம் வேறுபாடு இல்லாமல் பரவலாக்கப்படும் தொழில் வளர்ச்சி ஆகியவை இதற்கு அடித்தளம் அமைக்கின்றன. பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள், இளைஞர்களுக்குத் தரப்படும் உதவிகள் இதில் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை அதிகமானதற்கு காரணம் கண்டு பிடிப்பது சிரமமானது அல்ல. ‘திராவிட மாடல்’ ஆட்சியானது உருவான பிறகு கல்விக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. ‘எந்தக் கவலையும் தேவையில்லை, உங்களுக்கு நான் இருக்கிறேன், அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து தருகிறேன், நீங்கள் படியுங்கள், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து’ என்று ஒவ்வொரு மேடைகளிலும் மாணவர்களைப் பார்த்துச் சொல்லி வருகிறார் மாண்புமிகுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த நான்காண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறை துள்ளி எழுந்துள்ளது.
18 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குவதுமாணவ, மாணவியரின் கல்வி அறிவை மட்டுமல்ல; உடல் வளத்தையும் உருவாக்கி வருகிறது. 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவ, மாணவியரின் அறிவுச் செழுமையை வளப்படுத்தி வருகிறது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களாக, உயர்நிலையில் தேர்ச்சி பெறுபவர்களாக மாணவர்களை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவ, மாணவியர் பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆசிரியர்களும் வலம் வருகிறார்கள். மாணவர்களின் படைப்பாற்றல் ஊக்குவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி ஆணைகளை மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகின்றனர். 80 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் தரப்பட்டுள்ளன. திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து கொடுத்துள்ள பலன்தான் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
‘அனைத்தையும் உள்ளடக்கிய – அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் அரசு இது’ என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இதனுடைய பலன்கள்தான் இன்று கிடைத்த பாராட்டுகளாக நம் கண்முன்னால் விரிகிறது.
தனக்கென ஒரு இலக்கை வைத்து, அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வில்லாமல் பயணித்து, அந்தப் பயணத்தை விரைந்து நடத்தி, வெற்றியையும் உடனடியாகக் காட்டிய தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம். அவரது நல்லாட்சி, எந்நாளும் தொடர உழைப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ - மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
-
தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பது எப்போது? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்விகளை எழுப்பிய கணபதி ராஜ்குமார் MP!
-
பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மருந்துகள் தரமானவையா? : மக்களவையில் மலையரசன் MP கேள்வி!
-
பொதுப்பணித்துறையின் சாதனைகள்... வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக் கலை’’ என புகழப்படும்!
-
“நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!