murasoli thalayangam

போலி ஆளுமைகளுக்குத்தான் சிஸ்டம் சரியில்லை! - முரசொலி தலையங்கம்

ஆன்மிக அரசியல் எனப் பிறரை பேசச் செய்வது. நாட்டைப் பற்றி கவலை தெரிவிப்பது எல்லாம் ஆளுமையை கைப்பற்றச் செய்யும் பம்மாத்து வேலையாகும். களத்திற்கு வராமல் ஒளிந்தும் வெளிப்பட்டும் செய்யும் விமர்சன பேச்சுக்கள் அரசியல் ஆகிவிடுமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

பெரியார், அண்ணா, கலைஞர் அவர்தம் இயக்கம் ஆளுமையோடு இயங்குகிறது. அதன் அரசியல் பிரிவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு பின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார். அவர் ஆளுமையோடு தமிழ் மக்கள் புடைசூழ வருகிறார். நிழல்களையும் போலிகளையும் வென்றெடுக்க மென்மேலும் மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டே இருப்போம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. நிழல் ஆளுமைகள் அதிகார மயக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. போலி ஆளுமைகளுக்கோ இன்னும் சிஸ்டம் சரியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?