murasoli thalayangam

உண்மையை உடைத்த உலக வங்கி! - முரசொலி தலையங்கம் 

2017-2018-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டில் அதுவே 6.8 சதவிகிதமாக குறைந்தது. இது மேலும் குறைந்து 6 சதவிகிதமாகும் என உலக வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.

பண மதிப்பிழப்பை இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் போல அறிவித்து, 1000,500 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்றது பா.ஜ.க அரசு. நாடு முழுவதும் ஒரே வரி போட்டுவிட்டால் கஜானா நிரம்பிவிடும், நிதி மோசடி ஒழிந்துவிடும் என்றார்கள். உண்மையில் இவை இரண்டுமே இந்திய மக்கள் மீது ஒரு அரசாங்கம் நடத்திய நிதி பயங்கரவாதம் ஆகும்.

உலக வங்கியின் அறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இனியாவது செயல்பட்டாக வேண்டும். மத மயக்கம் காட்டி மக்களை வைத்திருந்தால் போதும் என்று நினைத்தால், பொருளாதாரம் விழும்போது பா.ஜ.க-வையும் சேர்த்து கவிழ்க்கும் என முரசொலி தலையங்கம் எச்சரித்துள்ளது.