M K Stalin
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “தேர்தலுக்கு பிறகு தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மக்கள் அனைவரும் டிவி முன்பு அமர்ந்து தினமும் அரசியலில் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்துள்ள அரசும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் ஆட்சி அமைத்திருக்கிறது.
அதிலும் நம்மோடு சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவால்தான் அந்த ஆட்சி அமைந்துள்ளது.நமக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் முதல் பொதுமக்கள் வரை பல்வேறு விதமாக பேசுகிறார்கள். ஒருவர் இன்னொருவரை குற்றம் சொல்கிறார். அவர் மற்றொருவரை கை காட்டுகிறார்.
இப்படி மாறி மாறி குற்றம் சொன்னால், அதற்கு முடிவே இருக்காது.அப்படியென்றால் இதற்கு யார் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கழகத்தின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இதுதான் நிதர்சனம்.வெற்றி கிடைத்தால் அதன் பெருமையை ஏற்கும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதுதான் நியாயம்.
நீங்களும் இந்த தோல்விக்காக அடுத்தவர் மீது பழி போட வேண்டாம்.அதனால்தான் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், திமுக தேர்தலாக இருந்தாலும், திருத்தமாக இருந்தாலும் உங்களிடம்தான் வருவேன்.
இந்தத் தேர்தல் முடிவுக்கு என்ன காரணம்? திமுக உங்களுக்காக இன்னும் எப்படியெல்லாம் உழைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். அதற்காகத்தான் ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் வெளிப்படையாக உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பதிவில்: “உடன்பிறப்பே, நீங்க சொல்லுங்க!தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?இனி நாம் என்ன செய்ய வேண்டும்?உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.” என குறிப்பிட்டு, “உடன்பிறப்பின் குரல்” என்ற http://udanpirapinkural.in இணையதள இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
Also Read
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!
-
“சூரியன் ஒருபோதும் மறையாது திரும்ப உதித்தே தீரும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!