M K Stalin
”காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல.. ஜனநாயகத்தின் முக்கியப் பணி” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டது. இதில் தவெக பெரும்பான்மை இடங்கள் இல்லாமல் உள்ளது. இருப்பினும் 108 இடங்களில் வென்றுள்ள தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியுள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவரி வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.
இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!
-
“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!