M K Stalin
“திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தி.மு.கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முரசொலி செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை - கோடம்பாக்கம் “முரசொலி” வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நேற்று (ஏப்.24) மாலை அணிவித்து திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம். எல். ஏ., முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் செயலாளர் கே.இராஜமாணிக்கம், இ.ஆ.ப. (ஒய்வு), 'முரசொலி' பொது மேலாளர் எஸ்.இராஜசேகரன், 'முரசொலி' செய்தி ஆசிரியர்கள் கே.சேது, இள.மதியழகன், 'முரசொலி' துணை ஆசிரியர் மு.முத்தையா, ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் வினோத் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்!
தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!
பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அல்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!