M K Stalin
17வது சட்டப்பேரவை தேர்தல்.. தொடர்ந்து 4வது முறை கொளத்தூரில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனால் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதன்படி திமுகவில் 164 வேட்பாளர்களும், 11 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்திலும், 70 தொகுதிகள் கூட்டணி கட்சியினரும் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து நேற்று (மார்ச் 29) திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் தொடங்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முறையும் மீண்டும் வெற்றி பெறுவார் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் 8 நாட்களுக்கு கொடுக்கப்படிருந்தாலும், இதில் விடுமுறை நாட்களை தவிர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அதன்படி, மார்ச் 30, ஏப்ரல் 1, 2, 6 ஆகிய நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமன்னார்கோயிலில் களமிறங்கும் திருமா.. வி.சி.க. வேட்பாளர்கள் யார், யார்?
-
தேர்தல் 2026 : களமிறங்கும் 234 பேர்... வெல்லும் வேட்பாளர்கள் மூலமாக இலக்கை வெல்வோம்! - முரசொலி!
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!