M K Stalin
தடை... அதை உடை... “கற்றனைத் தூறும் அறிவு” சிலை திறப்பு.. சிலை கூறும் செய்தி என்ன? - விவரம்!
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித் துறை புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வியில் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது.
தமிழர்தம் வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் மதிப்புகளை நன்குணர்ந்து எதிர்கால சமுதாயம் ஏற்றமுறும் வகையில் இன்றைய மாணவ தலைமுறை அறிவாற்றலைப் பெறவும், வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்கான கற்றல் அனுபவங்களைப் பெற்றிடும் வகையிலும் தரமான கல்வியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.
மாணவர்களின் வளர்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை பள்ளி கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tec Labs), திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களை மையமாகக் கொண்டு கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக இல்லம் தேடிக் கல்வி, வாசிப்பு இயக்கம், எண்ணும் எழுத்தும், மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளதுடன், மாணவர்களிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, நினைவாற்றல், விளையாட்டில் முன்னேற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளது என மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கல்வி சுற்றுலா, ஆசிரியர் திறன் மேம்பாடு, புதுமைப் பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள், “நம்ம ஊரு நம்ம பள்ளி” மூலம் அரசுப் பள்ளிகளுக்கு தனியார், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறைகள், டிஜிட்டல் கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கி மாணவர்களின் கல்வித்திறனை மேலும் வலுப்படுத்துகின்றன.
இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதன்படி, 1 கோடியே 43 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள “கற்றனைத் தூறும் அறிவு” சிலையை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read
-
ரூ.50 இலட்சம் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடுவுக்கு சிலை திறப்பு... எங்கு தெரியுமா?
-
பதிவுத்துறை சார்பில் ரூ.14 கோடியில் புதிய கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள்..” புத்தகமும், விருதுகளும்.. முதலமைச்சர் அசத்தல்!
-
தீவிரமாகும் சர்வதேச போர்... பாதிக்கப்படும் தமிழ்நாடு.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
சிலிண்டர்களை பதுக்கினால் சிறை… எஸ்மா (ESMA) சட்டம் சொல்வது என்ன? - முழு தகவல் உள்ளே!