M K Stalin
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
=> பொன்னப்ப நாடார் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தல் :
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2025-26ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்டத் தியாகி கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணி அவர்களின் போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர், திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மும்முறையும் தேர்தெடுக்கப்பட்டவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவர், இத்தகைய பல்வேறு பெருமைகளைப் பெற்றிருந்தாலும் எளிமையாக வாழ்ந்து ஏழை மக்களின் குரலாய் ஒலித்து, மக்கள் நெஞ்சில் மறையாமல் வாழ்பவர், குமரிக் கோமேதகம் எனப் போற்றப்பட்ட பெருமைக்குரிய ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி, அவர் தொண்டுகளைப் போற்றி அவருக்கு நாகர்கோவில் நகரில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
முன்னதாக, முதலமைச்சர் அவர்கள் இன்று கன்னியாகுமரி நகராட்சியில் 1 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டு நினைவு அலங்கார வளைவினை திறந்து வைத்தார்.
Also Read
-
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!
-
புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
-
மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
குமரியில் ரூ.7 கோடியில் 90 வீடுகள்.. திறந்து வைத்த முகாம்வாழ் தமிழர்கள்.. பூரித்துப்போன முதலமைச்சர்!
-
இது பெண்களுக்கான ஆட்சி… நம்முடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை முதலமைச்சர் நிச்சயம் தருவார்: கனிமொழி எம்.பி!