M K Stalin
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.11.2025) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ஈரோடு, சித்தோடு, ஆவின் பால்பண்ணை வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
பால்வளத் தந்தை பரமசிவன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தல்
கொங்கு மண்டலத்தின் பெருமையாகத் திகழ்ந்த
எஸ்.கே.பரமசிவன் 'பசுமை நிலம், வெண்மைப் பால்' என்ற கனவைக் கொண்டு நூற்றுக்கணக்கான மாடு வளர்ப்பாளர்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டிற்குப் புதிய பொருளாதாரக் களத்தை உருவாக்கியதோடு, விவசாயக் குடும்பங்களின் வருவாயை உயர்த்தவும், பால் விநியோக முறையை நவீனப்படுத்தவும், பால்வளத் துறையைத் தொழில்மயமாக்கவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், கூட்டுறவு பால் சங்கங்கள், பால் செயலாக்கக் கட்டமைப்புகள் - அனைத்தும் அவர் விதைத்த விதையின் செழிப்பான விளைவுகளாகும். அதனால் அவர் பால்வளத் தந்தை என அழைக்கப்படுகிறார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரமசிவன் அவர்களின் சேவையை போற்றும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 20.12.2024 அன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், "ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தன்னுடைய அயராத முயற்சிகளால் பால் உற்பத்தியைப் பெருக்கி, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா அவர்களின் திருவுருவச்சிலை, ஈரோடு பால் பண்ணையில் நிறுவப்படும்" என்று அறிவித்தார்.
அதன்படி, ஈரோடு, சித்தோடு, ஆவின் பால் பண்ணை வளாகத்தில், தமிழ்நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அவர்களுக்கு நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ.வேலு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அவர்களின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!
-
அரசியலமைப்புச் சட்டமே ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடும்போது, ‘மத்திய அரசு’ எதற்கு? : உதயநிதி கேள்வி!