M K Stalin
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திக்கும் நிகழ்வு 13.6.2025 அன்று தொடங்கப்பட்டது.
மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல, கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஜூன் 1, 2025 அன்று மதுரையில் நடைப்பெற்ற கழகப் பொதுக்குழுவில் இந்தச் சந்திப்பு குறித்து கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றும்போது அறிவித்து, அதன்படியே, கழக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக தலைவர் அவர்களை சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை தெரிவித்து வருகிறார்கள். கழகத் தலைவர் அவர்கள், கழக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் கழக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரது ஆதரவு நிலை குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்கள்கள்.
இச்சந்திப்பின்போது, முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பெரும்பாலானவற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்று கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய சிறப்புமிக்க “உடன்பிறப்பே வா” நிகழ்வின் 80-வது தொகுதியாக இன்றையதினம் (8.11.2025) ஒசூர் நிர்வாகிகளை கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து பேசினார். “உடன்பிறப்பே வா” நிகழ்வின் மூலம் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளை கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகள் தெரிவித்த போது, முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை அறிவாலயத்திற்கு அழைத்து அம்மருத்துவமனையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தாமதப்படுத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கவும் அறிவுறுத்தினார்.
“உடன்பிறப்பே வா” நிகழ்வின் மூலம் தங்கள் தொகுதிகளுக்குட்பட்ட பிரச்சனைகள் குறித்து கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதால் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் தங்கள் பகுதிக்கான “உடன்பிறப்பே வா” நிகழ்வு எப்போது நடக்கும் என்று ஆவலாக உள்ளனர்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது : ஆர்.எஸ்.பாரதி பதிலடி!