M K Stalin
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.9.2025) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ஓசூர், சூளகிரி, குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் அவர்கள் நடந்து சென்று, சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் அவர்கள் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், 270 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 562 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,23,013 பயனாளிகளுக்கு 2,052 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் :
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில்,
ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை வரை, இராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலை, ஜன்டாமேடு-புலியூர் சாலை, போச்சம்பள்ளி-கல்லாவி சாலை ஆகிய இடங்களில் 120 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் இருவழித்தடத்திலிருந்து நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்தப்பட்ட பணிகள், மையத்தடுப்பான்கள், வடிகால்கள், தடுப்புச் சுவர்கள் மற்றும் கல்வெர்ட் பணிகள், போச்சம்பள்ளி-கல்லாவி சாலை, தேன்கனிக்கோட்டை-பஞ்சப்பள்ளி சாலை, ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை, கூச்சூர்-ஆம்பள்ளி சாலை, அத்திமுகம்-பேரண்டப்பள்ளி-தொரப்பள்ளி சாலை, ஒரப்பம்-எலத்தகிரி-வரட்டனப்பள்ளி சாலை, பட்டலபள்ளி-ஜிஞ்ஜம்பட்டி சாலை, காவேரிபட்டிணம்-பாலக்கோடு சாலை, மாலூர்-ஓசூர்-அதியமான்கோட்டை சாலை, காரப்பட்டு-கல்லாவி சாலை, ஆவல்நத்தம் சாலை ஆகிய இடங்களில் 45 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் இருவழித்தடத்துடன் கூடிய பாவுதளங்கள் அமைத்து வலுப்படுத்தப்பட்ட பணிகள், சிறுபாலங்கள், மேம்படுத்தப்பட்ட ஓடுதள பாதைகள், ஒருவழித்தடத்திலிருந்து இருவழிதடமாக அகலப்படுத்தி வலுப்படுத்தப்பட்ட பணிகள், மேம்படுத்தப்பட்ட சாலை சந்திப்புகள், கல்வெர்ட் பணிகள், உப்பாரப்பட்டி-கோவிந்தபுரம் சாலை மற்றும் நாபிராம்பட்டி விளாநத்தம் சாலை – பாம்பாற்றின் குறுக்கே 19 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள், பொது சுகாதார நிலையக் கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள், கணினி வகுப்பறை பள்ளிக் கட்டடம், புதிய இருப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடம், சிமெண்ட் சாலைகள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், தானியக் கிடங்குகள், கதிரடிக்கும் களங்கள் என மொத்தம் 34 கோடியே 66 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் 112 முடிவுற்றப் பணிகள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,
23 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட இராமநாயக்கன் ஏரி, ஓசூரில் 48 இலட்சம் ரூபாய் செலவில் விலங்குகள் கருத்தடை மையம், 17 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் பல்நோக்கு மையக் கட்டடங்கள், நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 2 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், பர்கூர் பேரூராட்சியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் வகுப்பறைகள், தேன்கனிக்கோட்டையில் 99 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில்,
சூளகிரி, கிருஷ்ணகிரி, சமத்துவபுரம், கம்மம்பள்ளி, வெப்பாலம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிவறைகள், கிருஷ்ணகிரி மாவட்ட நூலக வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் போட்டித் தேர்வு மையம்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்,
கல்லாவி, ராயக்கோட்டை, சீதாராம், மூக்கண்டப்பள்ளி, பாகலூர், காமகிரி, திம்ஜேப்பள்ளி, உனிசெட்டி, ஒட்டையனூர், மண்ணாடிப்பட்டி, கணபதி நகர், கேசிசி நகர், ஜீஜீவாடி நகர், கொல்லேர்பேட்டை, குந்துக்கோட்டை ஆகிய இடங்களில் 8 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார பொது சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு;
நீர்வளத் துறை சார்பில்,
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் 3 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்கா;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,
பீமாண்டப்பள்ளியில் 35 இலட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம்;
கூட்டுறவுத் துறை சார்பில்,
பலவனப்பள்ளி, ஆலூர், கருக்கன்சாவடி, சொக்கராசனப்பள்ளி, மோரனப்பள்ளி, தானம்பட்டி, எமக்கல்நத்தம், குட்டூர், ரங்கனூர் ஆகிய இடங்களில் செயல்படும் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை முழுநேர நியாயவிலைக்கடையாக மாற்றம், இராயக்கோட்டையான்கொட்டாய், கந்தலம்பட்டி, லக்கபத்தனப்பள்ளி, ஏணிஅத்திக்கோட்டை, குண்டலகுட்டை, பெரியமோட்டூர், ராமேநத்தம், இருளர் காலணி, எ.கொத்தப்பள்ளி, சின்னதொகரை, மலசோனை, கல்கேரி, கோட்டப்பட்டி, கெட்டூர். கொட்டாவூர், அக்ரஹாரம், எஸ்.மோட்டூர், ஏக்கல்நத்தம், எடப்பள்ளி, மட்டாரப்பள்ளி, மற்றும் கனகொண்டப்பள்ளி ஆகிய இடங்களில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகள்;
- என மொத்தம், 270 கோடியே 75 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், உயர்மட்டப் பாலங்கள், சாலைகள் புதுப்பித்தல் மற்றும் வலுப்படுத்தும் பணிகள், மலக்கசடு சுத்திகரிப்பு மையம், வகுப்பறைக் கட்டடங்கள், இருப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்கள், துணை சுகாதார மையக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், ஓரடுக்கு ஜல்லி சாலைகள், தார் சாலைகளை மேம்படுத்துதல், ஆழ்துளை கிணறு, பைப் லைன் அமைத்தல், சிறு பாலங்கள், நிலத்தடி கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், உணவு தானியக் கிடங்குகள், நியாய விலைக் கடைகள், பல்நோக்கு கட்டடங்கள், தரைப் பாலங்கள், கதிரடிக்கும் களங்கள், ஏரிகள் புனரமைக்கும் பணிகள், திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல், மயானத்திற்கு தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள், பொதுசேவை மையக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்களை புனரமைக்கும் பணிகள், புதிய கை பம்புகள் மற்றும் கிணறுகள் அமைத்தல், என மொத்தம் 155 கோடியே 16 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 996 பணிகள்;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில்,
ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை, ஜன்டாமேடு-புலியூர் சாலை, திருப்பத்தூர்-சிங்காரபேட்டை சாலை, இராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலை, காவேரிப்பட்டினம்-போச்சம்பள்ளி சாலை, பாகலூர்-பேரிகை சாலை, பர்கூர்-ஜெகதேவி சாலை, தேன்கனிக்கோட்டை-பஞ்சப்பள்ளி சாலை, சிங்காரப்பேட்டை-பாவக்கல் சாலை, சிங்காரப்பேட்டை-பள்ளத்தூர் சாலை, பர்கூர்-திருப்பத்தூர் சாலை, தளி ஜவளகிரி கர்நாடகா மாநில எல்லை சாலை, தேன்கனிக்கோட்டை-ஜவளகிரி-கர்நாடகா மாநில எல்லை சாலை வரை, தேன்கனிக்கோட்டை-மதகொண்டப்பள்ளி சாலை, மாதேப்பள்ளி-கோனேகவுண்டனூர்-நாரலப்பள்ளி சாலை, மாலூர்-ஓசூர் அதியமான்கோட்டை சாலை, நாச்சிகுப்பம்-மணவாரனப்பள்ளி-சிங்கிரிப்பள்ளி சாலை, பர்கூர் மாநில சாலை, ஓசூர்-தளி சாலை- இராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலை, தாசிரிப்பள்ளி-தானம்பட்டி சாலை, ஜம்பு குட்டப்பட்டி சாலை, மத்தூர்-மல்லபாடி சாலை, கூச்சூர்-ஆம்பள்ளி சாலை ஆகிய இடங்களில் 256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல், கல்வெர்ட் அமைக்கும் பணிகள், வடிகால் கட்டும் பணிகள், சாலை சந்திப்பினை மேம்படுத்தும் பணிகள், ஓடுதளப் பகுதியை மேம்படுத்துதல், தடுப்புச் சுவர் அமைத்தல், இருவழித்துடன் கூடிய பாவுதளமாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணிகள், சாலை வளைவினை அகலப்படுத்தும் பணிகள், தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி-நாட்டறம்பாளையம், சூளகிரி - உத்தனப்பள்ளி, அத்திமுகம் - பேரண்டப்பள்ளி- தொரப்பள்ளி ஆகிய இடங்களில் 15 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில்,
நல்லூர், சின்னகொத்தூர், வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, கெலமங்கலம், இராயக்கோட்டை, அஞ்செட்டி, அந்தேவனப்பள்ளி, பாண்டுரங்கன்தொட்டி, சிகரலப்பள்ளி, பார்த்தகோட்டா, உலகம், இம்மிடிநாயக்கனப்பள்ளி, சூளகிரி, ஒன்னல்வாடி, புக்கசாகரம், ஹளேசீபம், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, களர்பதி, மாதேப்பட்டி, வேலம்பட்டி, மோரனஹள்ளி, காவேரிப்பட்டிணம், நடுப்பையூர், இராமாபுரம், நந்திமங்கலம், சிங்காரப்பேட்டை, மகனூர்பட்டி, காரப்பட்டு, ஊத்தங்கரை, உள்ளட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் 39 கோடியே 93 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள் போன்ற பல்வேறு பணிகள்;
வனத் துறை சார்பில், தேன்கனிக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யானைகள் காப்புக்காட்டிலிருந்து வெளியே வருவதை தடுக்க இரும்புவட கம்பி வேலி அமைக்கும் பணிகள்;
நீர்வளத் துறை சார்பில்,
கெலவரப்பள்ளி அணையின் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள், கிருஷ்ணகிரி அணையிலிருந்து செல்லும் இடதுபுற ஊற்றுக் கால்வாய் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள், சூளகிரி சின்னார் அணையின் கால்வாய் மதகின் கதவு 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில்,
போச்சம்பள்ளியில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்;
பொதுப்பணித் துறை சார்பில்,
ஓசூரில் 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை கட்டடம்;
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில்,
ஓசூர் - பட்டு வளர்ச்சி விதைப் பண்ணையில் 1 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெண்பட்டு விதை அங்காடி, பட்டு வளர்ச்சி வளாகத்தில் 1 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வித்தகக் கட்டடம், கொள்ளட்டி பட்டு வளர்ச்சி விதைப் பண்ணையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு விதைக் கொட்டகை கட்டடம், உத்தனப்பள்ளியில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விதைப் பண்ணை, கல்கொண்டப்பள்ளி பட்டுப்புழு விதைப்பண்ணையில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்புக் கட்டடம் மற்றும் கழிவறைக் கட்டடம், தளி, ஆவலப்பள்ளி, ஓசூர், மேலகிரி ஆகிய இடங்களில் உள்ள பட்டுப்புழு வளர்ப்பு விதைப் பண்ணைகளில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு விதை கொட்டகைக் கட்டடங்கள், ஓசூர், ஆவலப்பப்ளி, தளி, மேலகிரி, கல்கொண்டப்பள்ளி, உத்தனப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள பட்டு வளர்ச்சி விதைப் பண்ணைகளில் 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீர் வசதிகள்;
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்,
பர்கூரில் 5 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமூக நீதி விடுதிக் கட்டடம்;
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்,
தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி ஒன்றியத்தில் 4 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,
தளியில் 3 கோடியே 57 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,
கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள், பர்கூர் பேரூராட்சியில் 4 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், பர்கூர் பேரூராட்சியில் 4 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், நாகோஜனஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்;
கனிம வளத்துறை சார்பில்,
பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 2 கோடியே 27 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சூளகிரி பந்திகான் கால்வாயில் 25 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வெர்ட் மற்றும் தடுப்புச் சுவர்கள், பர்கூர், ஓசூர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 14 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், ஒப்பதவாடியில் சமயபுரம் அங்கன்வாடிக்கு 5 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர்;
சுற்றுலாத்துறை சார்பில், அவதானப்பட்டி ஏரிப் பகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் பணிகள்;
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், தொரப்பள்ளியில் 44 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இராஜாஜி நினைவு இல்லத்தை புதுப்பிக்கும் பணிகள்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்,
சிங்காரப்பேட்டையில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம்;
என மொத்தம், 562 கோடியே 14 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 1114 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :
வருவாய்த் துறை சார்பில்,
77,002 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 8,709 பயனாளிகளுக்கு சர்கார் புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு பட்டாக்கள், 180 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவிகள், 75 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண உதவிகள்;
கூட்டுறவுத் துறை சார்பில்,
46,061 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், சுயஉதவிக் குழுக் கடன், சம்பளக் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், விவசாய நகைக் கடன்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,
7,526 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள், ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் உதவிகள், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் உதவிகள்,
மகளிர் திட்டம் சார்பில்,
2,883 பயனாளிகளுக்கு உதவிக்குழுக்களுக்கான வங்கி இணைப்புகள், பண்ணை சார்ந்த தொகுப்புகள் மற்றும் அலகுகள், நுண்நிதி கடன்கள், பண்ணை சாரா வாழ்வாதார திட்டம், மகளிர் உதவிக் குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி ஆகியவற்றின் கீழ் உதவிகள்,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்,
4,240 பயனாளிகளுக்கு துளிநீரில் அதிக பயிர் திட்டம், மானாவரி மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நிழல் வலை குடில், தேனீவளர்ப்பு பெட்டிகள், சிப்பம் கட்டும் அறை, முன் குளிர்விப்பு அறை, மண்புழு உரம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
வேளாண்மைத் துறை சார்பில்,
30,548 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனத் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம், குறுவை சாகுபடி திட்டம், தேசிய சமையல் எண்ணெய்க்கான திட்டம், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், மண்புழு உரப்படுக்கை, ஆழ்துளை கிணறு மற்றும் வேளாண்மை இயந்திரமாக்கல் திட்டம், தெளிப்பான்கள் மற்றும் பசுந்தாள் விதைகள் விநியோகம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில்,
102 நபர்களுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான இணை இயக்க திட்டம், மானியத்தில் மின் மோட்டார் பம்புகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்,
14,232 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவிகள், 11,313 பயனாளிகளுக்கு ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்கள், 3,400 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், 543 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்;
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,
30 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், கலைஞரின் கைவினைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,
மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், 67 பயனாளிகளுக்கு கல்விக் கடன்கள்;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 350 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்;
மாவட்ட வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், 3,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 3,827 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித்தொகை, ஓய்வூதியம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவிகள்;
தாட்கோ சார்பில், 1,551 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம், தாட்கோ முன்னேற்றச் சங்கம், தனி நபர் கடன், நன்னிலம் மகளிர் நிலவுடமைத் திட்டம், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்களின் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்குதல்,
பால்வளத் துறை சார்பில், 100 பயனாளிகளுக்கு கறவை மாடு பாரமரிப்புக் கடன்கள்;
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில்,
247 பயனாளிகளுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் உதவிகள், கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுபான்மையின பெண்களுக்கு தொழில் தொடங்க நலத்திட்ட உதவிகள், இலவச தையல் இயந்திரம், இலவச எல்.பி.ஜி. தேய்ப்பு பெட்டிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்குதல்;
சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில்,
4,204 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்,
முன்னாள் படைவீரர் நலத் துறை சார்பில், 26 பயனாளிகளுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள்;
மாவட்ட கலால் மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில், 83 பயனாளிகளுக்கு மறுவாழ்வு நிதியுதவி,
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் வழங்குதல்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 59 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களும், 100 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்குதல்,
மாவட்ட திறன் பயிற்சி துறை சார்பில், 2,526 பயனாளிகளுக்கு வெற்றி நிச்சயம் குறுகிய கால திறன் பயிற்சிகான சான்றிதழ்கள் வழங்குதல்
- என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 2,052 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,23,013 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
Also Read
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !