இளையராஜாவை கவுரவிக்கும் வகையில், பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா, "உலகிலேயே இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் ஒரு அரசு பாராட்டு விழாவை நடத்தியது கிடையாது. இசை உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாராட்டு விழா நடத்துகிறது என்றால் அது தமிழ்நாடு அரசுதான். நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
உலகிலேயே இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் ஒரு அரசு பாராட்டு விழாவை நடத்தியது கிடையாது. இசை உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாராட்டு விழா நடத்துகிறது என்றால் அது தமிழ்நாடு அரசுதான். நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம்.
சிம்பொனி இசையமைக்கச் செல்வதற்கு முதல்நாளே எனக்கு நேரில் வந்து வாழ்த்தியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். சிம்பொனி இசையமைத்துத் திரும்பும்போது எனக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. இன்று பாராட்டு விழாவும் நடத்துகிறார்கள். இதை என்னால் நம்ப முடியவில்லை.
முன்னாள் முதல்வர் கலைஞர் என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான். காரைக்குடியில் நடந்த விழாவைத் தலைமை ஏற்று நடத்திய கலைஞர் இசைஞானி என்ற பட்டத்தை
இவ்வளவு கட்டுப்பாடுகளை மீறி 35 நாளில் சிம்பொனி உருவாக்கினேன். என் கற்பனையில் தோன்றிய இசையை 87 பேருக்கு எழுதியதுதான் அவர்கள் வாசித்தார்கள். 35 நாட்களில் சிம்பொனி இசையை வடித்தேன். எண்ணத்தில் தோன்றியதை ஒலி வடிவில் வடித்தேன். ஏராளமான சுய கட்டுப்பாடுகளுடன் சிம்பொனி இசையை உருவாக்கினேன். இதற்காக நான் நன்றி தெரிவிக்க வேண்டியது எனது குழந்தைகளுக்குத்தான். என்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவழித்து இருந்தால் நான் இசையமைத்தும் இருக்க முடியாது. சிம்பொனியும் அரங்கேற்றி இருக்க முடியாது.
சிம்பொனி இசையைக் கேட்டு அழுததற்குச் சாட்சிதான் கமல். சிம்பொனி இசையை தமிழ்நாட்டுக்கும் இசைக்கும் முடிவுக்கு உடனே முதலமைசார் சரி என்றார். சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனால் பெரிய மைதானத்தில் இதே கலைஞர்களை நடத்துவேன். இதற்கு தமிழக முதல்வர் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வார் என்று நம்பிக்கையுடன் அவரை கேட்காமலே இதனை கூறுகிறேன்" என்று கூறினார்.