M K Stalin
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரைக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தனது x சமூக வலைதளப் பக்கத்தில், “நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது.
அதேசமயம் அ.தி.மு.க. - பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை - தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அமைத்துள்ள "War Room"-ஐத் திறந்து வைத்தேன்.
விறுவிறுவென நடைபெற்று வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!