M K Stalin
பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 11 பேருக்கு பரிசுத் தொகை... வழங்கினார் முதலமைச்சர்!
தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி மற்றும் பலமுனை பட்டு நூற்பாளர்கள் என 11 நபர்களுக்கு ரூ.8.25 இலட்சம் பரிசுத்தொகைக்கான காசோலைகள் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.03.2025) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுத்தொகையாக 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான பட்டுவளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், நமது மாநிலத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1,00,000/- ரூபாய், 75,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும், தரமான விதைப் பட்டுக்கூடு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1,00,000/- ரூபாய், 75,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என்றும், தரமான பட்டு நூல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு தலா முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1,00,000/- ரூபாய், 75,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும், இதற்கென 9 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மூன்று சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்களும், மூன்று சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும், மூன்று சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களும் தேர்வுக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு சு.ஜேக்கப் அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வை.அருள்குமரன் அவர்களுக்கும்;
மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நா.மஞ்சுநாதா அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.நாகராஜ் அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சே.சாந்த முர்த்தி அவர்களுக்கும்;
மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மு.முகமது மதீனுல்லா அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.சேகர் அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. ஆர். சுபத்ரா அவர்களுக்கும்;
மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த க.பிரகாஷ் அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. ஜெ. வேதவள்ளி அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ரொசாரியோ லாசர் அவர்களுக்கும்;
என மொத்தம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை 11 பட்டு விவசாயிகள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள், தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!