M K Stalin
“நானும் அரசும் உங்கள் பக்கத்திலேயே இருப்போம்..” -பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் - 2025 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது. இதில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 தேர்வர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 தேர்வர்களும், மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 9,13,036 தேர்வர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
அதன்படி நாளை (மார்ச் 03) 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :
தமிழ்நாட்டின் 12- ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.
நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்குள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!