M K Stalin
“இராணுவ வீரர்கள் தனி மனிதர்கள் அல்ல...” - படைவீரர் கொடி நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆண்டுதோறும் இந்திய எல்லையை மட்டுமின்றி, நம்மையும் பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கு கொடி நாளில் மரியாதை செலுத்துவது வழக்கம். அதோடு இராணுவ வீரர்கள் மட்டுமின்றி, முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நாளில் மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் 'படைவீரர் கொடி நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இந்திய மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை வழங்குவர். இந்த 'படைவீரர் கொடி நாள்' ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த நாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள படைவீரர் கொடி நாள் செய்தி வருமாறு :
தம் பெற்றோரையும், தாம் பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், "படைவீரர் கொடி நாள்". இக்கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
நாட்டின் எல்லைகளையும், நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரம் வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். ஏனையோர், எப்பொழுது எத்தகைய துன்பம் வந்தாலும், சிறிதும் அஞ்சாமல் தங்கள் கடமையே பெரிதென்று எண்ணிப் பணியாற்றுகிறார்கள்.
இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு இராணுவ வீரர்களுக்கு உண்டு. அந்தப் பொறுப்பினை நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இராணுவ வீரர்களுடைய குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், பொருள் உதவியும், பிற உதவிகளும் செய்திட வேண்டும் என்பதை நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்தக் கொடி நாள் நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?