M K Stalin
“அவருக்கு வேலை இல்லை...” - எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டங்கள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். இன்று (அக்.26) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இதுகுறித்து முதலமைச்சர் அளித்த பேட்டி வருமாறு :
“மதுரையில் கனமழை பெய்திருந்தாலும் இரவு நேரத்திற்குள் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. மதுரை மாவட்ட அமைச்சர்கள் 2 பேர் முகாமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 8 இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது, மற்றபடி பெரிய பிரச்னை இல்லை. இன்று மழை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டங்கள் நடைபெற்று வருகிறது.” என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடன் வாங்கி அரசு நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர், “எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலை இல்லை. அவருடைய பெயர் தினமும் பத்திரிகையில் வர வேண்டும்; டிவியில் முகம் வரவேண்டும் என்பதால் எதையோ சொல்லி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.” என்றார்.
தொடர்ந்து “மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாக ஒன்றிய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. அந்த நிதியை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.” என்றார்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !