M K Stalin
மின் விநியோகம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர் உயிரிழப்பு : முதலமைச்சர் இரங்கல் & நிதியுதவி!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளானர். அதோடு வெள்ளம் ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசு ஊழியர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள், திமுகவினர் என பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் செய்து வரும் நிலையில், தண்ணீர் பாதிப்பினால் இருக்கும் சில கிராமங்களில் மின் விநியோகம் மெதுவாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மின் ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த மின் ஒப்பந்த பணியாளரான முருகன் (45) என்பவர், நேற்று (24.12.2023) கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின் ஊழியர் முருகன் உயிரிழப்புக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு பின்வருமாறு :
"தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆ.முருகன் (வயது 45) என்பவர் (24.12.2023) அன்று கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்."
Also Read
-
ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வா?.. : அவதூறு பரப்பும் தவெக.. - உண்மையை விளக்கிய TN Fact Check!
-
விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை! : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!
-
உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!