M K Stalin

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு : எந்தெந்த வகுப்புக்கு எப்போது தொடங்கும்? - முழு அட்டவணை விவரம் !

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5-ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இந்த புயல் கனமழை காரணமாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் வசிக்கும் மக்கள் பலரும் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதோடு புயல் அன்று 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, மக்களுக்கு தேவையானவை இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 3, 4 ஆகிய தேதிகளில் இடைவிடாமல் அதி பயங்கர கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

இதனை அகற்றவும் பணியில் அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். எதிர்பாராத வகையில் பெய்த இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக மக்கள் பலரது வீடுளிலும், பள்ளி கல்லூரி போன்ற வளாகத்திலும் மழை நீர் புகுந்து தேங்கி கிடந்துள்ளது.

இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக இருந்து வந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 1 வார காலமாக விடுமுறை அளிக்கப்பட்டு நாளை முதல் வழக்கம்போல் மீண்டும் செயல்படவுள்ளது. இந்த சூழலில் நாளை பள்ளி மாணவர்களுக்கு தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வை தமிழ்நாடு அரசு ஒத்திவைத்துள்ளது.

இந்த புயல் கனமழை காரணமாக மாணவர்கள் பலரது வீட்டிலும் மழைநீர் புகுந்து அவர்கள் புத்தகங்கள் சேதமாகியுள்ளது. இதனால் மாணவர்களால் தேர்வுக்கு தயாராக முடியாது என்ற காரணத்தினால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு வரும் புதன்கிழமை (13.12.2023) அன்று நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை நாளை (திங்கள்கிழமை - 11.12.2023) வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: மிக்ஜாம் புயல் : இழந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம் : எப்போது ? எங்கே? - முழு விவரம் !