M K Stalin

"கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" -பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திண்டுக்கல் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கல்வி என்னும் அறிவு சொத்தை பேணி வளர்க்க வேண்டிய பொருப்பு மாநில அரசிடம் உள்ளது. இதனால் கல்வி வளர்ச்சிக்கான முழு ஒத்துழைப்பையும் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும்.

கல்வி என்பதே அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோதே மாநில பட்டியலில் வழங்கப்பட்டிருந்த உரிமை. இடையில் பொதுப்பட்டியலுக்கு கொண்டுசெல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும்.

கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் சேர்க்க பிரதமரும், ஒன்றிய அரசும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" என பிரதமர் மோடி இருக்கும் போதே நேரில் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த கோரிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் பிரதமர் மோடியை மேடையில் வைத்து புகழமட்டுமே செய்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைக்கான கோரிக்கையை உரக்க பேசியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

Also Read: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு !