M K Stalin
தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மற்றுமொறு மகுடம்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேளான், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாக உள்ளதாக பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.
இதனால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொறு கூட்டத்தில் பேசும் போதும் இந்தியாவிற்கே திராவிட மாடல் அரசு வழிகாட்டி வருகிறது என பெருமையுடம் பேசி வருகிறார்.
தமிழ்நாடு அரசின் சிறப்பான ஆட்சிக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக வட மாநிலங்களில் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதும், இதற்கு நேர்மாறாக வேளாண் உற்பத்தி அதிகரிப்பால் தென் மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் தானியங்களின் விலை 9.5 சதவீதம் அதிகரித்ததே சில்லறை பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு சில்லறை பணவீக்கத்தில் ஏற்பட்ட மிக அதிக உயர்வு இதுவாகும்.
ஆனால், சில்லறை பணவீக்கத்தின் மாநில வாரியான பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. தென் மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் 5 சதவீதமாகவே உள்ளது. இதற்கு நேர்மாறாக வட மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் இந்தியாவின் சராசரியைவிட அதிகமாகவே உள்ளது.
குஜராத்தில் 11.5%, ராஜஸ்தானில் 10.4% , மேற்கு வங்கத்தில் 10.3%, உத்தரப்பிரதேசத்தில் 9.2%, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் 8.5 சதவீதமாகவும் சில்லறை பணவீக்கம் உள்ளது. ஆனால், தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் உணவுப் பொருட்களின் சில்லறை பணவீக்கத்தில் 5%க்கு குறைவாக உள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!