M K Stalin
ஆங்கிலம் மட்டுமல்ல இந்த மொழிகளும் பயிற்றுவிக்கப்படும் -நான் முதல்வன் திட்டம் மூலம் CM வெளியிட்ட அறிவிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'நான் முதல்வன்' திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், பொன்முடி,தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றவே நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல், மருத்துவத்தை நோக்கி ஓடிவருகின்றனர்.
பல்துறை சார் படிப்புகளைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் தமிழ்நாட்டு மாணவர்கள்.
மாணவர்களின் திறன்களை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் நாடே செழிக்கும். 'நான் முதல்வன்' இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இதில் Cloud Computing,Machine Learning,Cyber Security,Robotics, AI உள்ளிட்ட புதிய படிப்புகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
புதிது புதிதாக தொழில்கள் உருவாகி வருகின்றன. எனவே மாணவர்கள் தனித்திறன்களை உருவாக்கிக் கொள்வது கட்டாயமாக உள்ளது. அப்படி இருந்தால் தான் கல்லூரி படிப்பை முடித்த உடன், வேலைவாய்ப்பைப் பெற முடியும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் குறுகிய கால பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் மாணவர்கள் புலமை பெற்றிருக்க வேண்டும். நல்ல மொழியாற்றல் இருந்தால் தான், வளர்ச்சி கிடைக்கும். கல்லூரி மாணவர்களுக்கு பெரும் தடையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல் தான். இதனால் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையே மாணவர்கள் கைவிட்டுவிடுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்களுக்கு ஆங்கில மொழியாற்றல் அவசியம்! தாய் மொழி தமிழ். உலகோடு நம்மை இணைக்கக் கூடிய மொழி ஆங்கிலம். இந்த 2 மொழிகளையும் எழுத, பேச, படிக்க மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கல்லூரிப் படிப்பை முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல்.
ஆங்கிலத் திறன் குறைவாக இருப்பதால் சில மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. எனவே 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சாற்றல் என்ற பாடத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம் மட்டுமின்றி ஜப்பானிய, ஜெர்மானிய, ஃபிரெஞ்சு மொழிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
ஆங்கில புத்தகங்களை வாசிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். போட்டித்தேர்வுகளுக்கும் தயாராதல் அவசியம். எனவே மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி, வேலை வாய்ப்புக்கேற்ற வகையில் தயார்படுத்த மைக்ரோசாப்ட், இன்போசிஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. இதேபோல், உலகின் தலைசிறந்த சாதனையாளர்களாகவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வர வேண்டும். தமிழ் இளைஞர்கள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு; மாணவர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இலக்கை எட்ட அயராது உழைப்போம்" என்றும் தெரிவித்தார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!