M K Stalin

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும்? - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!

இது எங்களின் வெற்றி! அவர்களின் தோல்வி!

செய்தியாளர்:- இது உங்களுக்கான வெற்றி என்று கருதுகிறீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- நிச்சயம் உறுதியாக இது எங்களுக்கான வெற்றி, அவர்களுக்கான தோல்வி.

செய்தியாளர்:- நீங்கள் தொடர்ந்து கடுமையான பயணங்கள் மேற்கொள்கிறீர்கள். அப்படிப்பட்ட பணிகளுக்கிடையே எப்படி நீங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்கிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- என்னைப் பொறுத்த வரையில், நான் எப்போதுமே ‘பிஸி’யாகத் தான் இருப்பேன். எப்போதுமே வேலை செய்து கொண்டேதான் இருப்பேன். அவ்வப்போது ‘பிஸி’யான நேரங்களுக்கிடையேயும் என்னை ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்வதற்கு பேரப்பிள்ளைகளோடு கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருப்பேன். அத்துடன் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து கொள்வேன். ‘வாக்கிங்’ போவேன். ‘ஜிம்’ செய்யும் போது புன்னகையோடு பண்ணுவேன். ‘யோகா’ செய்வேன். 10 நாட்களுக்கு ஒருமுறை ‘சைக்கிளிங்’ போவேன். ஆக இவைகளெல்லாம் எனது உடற்பயிற்சியாக செய்து கொண்டிருப்பதால் எவ்வளவு பிஸியும் எனக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை.

எம்.எஸ். பாடல்களை திரும்பத் திரும்ப கேட்பேன்

செய்தியாளர்:- நீங்கள் கர்நாடக இசையை அதிகமாக விரும்புவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- ஒரு சில சமயங்களில் நான் இரவில் படுக்கும் போது, ‘எம்.எஸ்.’ அவர்களின் பாடல்களை திரும்பத் திரும்ப கேட்பேன்.

செய்தியாளர்:- நீங்கள் நன்றாக பாடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒரு சில பாடல் வரிகளை எங்களுக்காக பாடிக் காட்டுகிறீர்களா..?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- அவ்வப்போது பாடுவேன். நன்றாக பாடுவேன் என்று சொல்ல முடியாது. (சிரிப்பு..)

Also Read: “முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!

செய்தியாளர்:- ஒருமுறை எங்களுக்காக பாடுங்களேன்..

தலைவர் மு.க.ஸ்டாலின்:- நான் பலமுறை தொலைக்காட்சிகளில் பாடியிருக்கிறேன். அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு, நூறிலும் சாவு... இப்போதைக்கு அவ்வளவுதான்.

செய்தியாளர்:- நான் தற்போது அடுத்த முதலமைச்சரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேனா?

தலைவர் மு.க.ஸ்டாலின்:- தேர்தல் முடிந்த பிறகு அதற்கு உங்களுக்கு பதில் கிடைக்கும்.

செய்தியாளர்:- நீங்கள் முதலமைச்சராக ஆனால் உங்களின் முதல் உத்தரவு, முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?

மு.க.ஸ்டாலின்:- முதலில் நான் அறிவித்துள்ளேன் அல்லவா? அதாவது, முதல் 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று சபதமிட்டுள்ளேன். அதுவும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்து வாசலில் இருந்து அந்த உறுதி மொழியை எடுத்துள்ளேன். அண்ணா மீது ஆணையாக - கலைஞர் மீது ஆணையாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக எடுத்துள்ளேன். ஆக, அதை முதலில் முடிக்க வேண்டும்.

அதற்குண்டான வழிமுறைகள் முதல் கையெழுத்தாக இருக்கும். அடுத்த கையெழுத்து தேர்தல் அறிக்கையில் அறிவித்ததாக இருக்கும். அதனை நீங்கள் பார்ப்பீர்கள்!.

நிறைவாக, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேர்காணல் கண்ட என்.டி.டி. செய்தியாளர், "உங்கள் கடுமையான தேர்தல் பணி நேரத்திலும் எங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பேட்டியளித்தமைக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

Also Read: ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் எனும் மோடி OPS, EPSன் ஊழலை மட்டும் ஆதரிக்கிறாரா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!