M K Stalin
“இந்தியாவில் போராட்டங்கள் வெடிக்கக் காரணமே அ.தி.மு.கதான்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கொளத்தூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 1,063 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் சிறுபான்மையினர்களுக்காக துணை நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
சிறுபான்மையினருக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றித் தந்தவர் தலைவர் கலைஞர். 1989ல் மாநில சிறுபான்மையினர் நல வாரியத்தையும், 1999ல் சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தையும் தலைவர் கலைஞர் உருவாக்கினார். சிறுபான்மையினருக்கான நலன்களை கவனிப்பதற்காகவே தனி இயக்குனரகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், அதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரியையும் நியமித்தார்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களை பாதிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பிக்களும் ஆதரவாக வாக்களித்ததால்தான் இந்த சட்டமே நிறைவேறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவளித்து அ.தி.மு.க வாக்களித்ததால்தான் இந்தியாவே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆகவே இந்த 12 மாநிலங்களவை எம்.பிக்கள்தான் இந்தியாவில் போராட்டங்கள் நடைபெறுவதற்கு காரணம்.
குடியுரிமை சட்டத்தில் என்ன உள்ளது என்றே தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நாட்டு மக்களையும், சிறுபான்மை மற்றும் ஈழத்தமிழர்களையும் பாதுகாக்க இந்த கிறிஸ்துமஸ் தின நிகழ்ச்சியில் உறுதியேற்போம் எனக் கூறினார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!