M K Stalin
வேலூர் தொகுதியில் தி.மு.க பெறப்போகும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
வேலூர் மக்களவை தேர்தல், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், குடியாத்தம் சட்டமன்றப் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ''தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம். வேலூர் மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை திமுக தான் கொண்டுவந்தது. ஆனால் திட்டத்தை விரிவுபடுத்தாமல் கிடப்பில் போட்டது அதிமுக அரசு.திமுக வெற்றி பெற்றால் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தப்படும்.
தலைவர் கலைஞரை அவமானப்படுத்துவதாக நினைத்து அப்துல் கலாமை கொச்சைப்படுத்தி உள்ளார் பன்னீர்செல்வம். அவர் கூறியது உண்மை என்றால் நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் அரசியலை விட்டு விலக வேண்டும். உண்மையை ஓ.பி.எஸ் நிரூபிக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன். டாக்டர் கலாம், குடியரசு தலைவராக தி.மு.கவே காரணம். அது அரசியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த 38 எம்.பி.க்களின் குரல் மக்கள் பிரச்சனைக்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல கதிர் ஆனந்தின் குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் சும்மா இருப்பதாக முதல்வர் பொய் சொல்கிறார். செய்தித்தாள் படித்தால் தான் தி.மு.க எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள் என முதல்வருக்கு தெரியும். வேலூர் தொகுதியில் தி.மு.க பெறப்போகும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது'' இவ்வாறு தெரிவித்தார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!