M K Stalin
அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்: வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடல்!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.
தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் வெற்றிலை விவசாயிகளை சந்தித்து அவர்களையுடைய குறைகளை கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.
மத்தியிலும், மாநிலத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதிபட தி.மு.க தலைவர் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி தொகுதியில் குடிநீர் பிரச்னையை போக்கவும், விவசாயிகளுக்கான நீர் தேவை நிவர்த்தி செய்யவும், புகழூரில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் பேசிய கழகத் தலைவர், புகழூர் பகுதியில் வெற்றிலை ஆராய்சி மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட தவுட்டுபாளையத்தில் நடைபயணமாகச் சென்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிக்குச் சென்று தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, திரளான மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!