M K Stalin
தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக நேற்று (ஏப். 30 ஆம் தேதி) தூத்துக்குடி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்றாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (மே 1 ஆம் தேதி) தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சாலை- டூவிபுரம் 5 ஆவது தெரு சந்திப்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில் பேரணி புறப்பட்டு வி.வி.டி. சிக்னல், பாளையங்கோட்டை சாலை வழியாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பேரணி நிறைவுபெற்றது.
பேரணியில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி , தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதா ஜீவன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்,முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பூங்கோதை,மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் தொமுச மாநில செயலாளர் சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் தொமுச, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!