India
🔴LIVE : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..
மேற்கு வங்கத்தில் கடும் போட்டி!
மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 106 இடங்களில் திரிணாமுல் காங்கிரசும், 105 இடங்களில் பா.ஜ.க.வும் முன்னிலை.
வாக்குவாதம்!
மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே, திரிணாமுல் மற்றும் பா.ஜ.க.வின் வாக்கு எண்ணுகை முகவர்களிடையே வாக்குவாதம்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே வாக்குவாதம் தொடங்கியதால் பரபரப்பு.
தேர்தல் ஆணையத்தின் பதில்!
மேற்கு வங்கத்தின் நோவாபாரா தொகுதிக்குட்பட்ட பகுதியில் குப்பை போல் குவிந்து கிடந்த வாக்குச் சீட்டுகள் (VVPAT) பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவை மாதிரி தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தியளிக்கவில்லை என பலரும் தெரிவித்ததையடுத்து, இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!