India
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
(GFX IN) Double engine — cute slogan, a serious federal question எனும் தலைப்பில் எஸ்.ஒய்.குரேஷி எழுதியுள்ள கட்டுரையை தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் நேரத்தில் நினைவில் நிற்கும் முழக்கங்கள் உருவாகும், வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அவை மறைந்துவிடும், ஆனால் சில முழக்கங்கள் அரசு நிர்வாகம் குறித்த மக்களின் மனதில் நிலைத்து நின்றுவிடும் என்றும் அத்தகைய ஒரு முழக்கம்தான் இரட்டை எஞ்சின் அரசு என்றும் சுட்டிக்காட்டி உள்ள அவர்;
அழகாக தோன்றும் இந்த வார்த்தைக்கு பின் இந்தியாவின் கூட்டாட்சிமுறை குறித்த ஒரு ஆழமான அரசியலமைப்புச் சட்டக் கேள்வி அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால், வளர்ச்சி வேகமாக நடைபெறும் என்ற வாதத்தில் மேலோட்டமாகப் பார்த்தால் குறையேதுமில்லை எனத் தெரிவித்துள்ள எஸ்.ஒய்.குரேஷி, ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சிக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்கம் இரட்டை எஞ்சின் ஆட்சி என்ற முழக்கத்தில் மறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சியை மாநிலத்திலும் தேர்வு செய்யாவிட்டால் மாநிலத்திற்கான நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என என மக்களை மறைமுகமாக மிரட்டும் வகையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மாநில அரசுகள், ஒன்றிய ஆளும் கட்சியின் நன்மதிப்பையோ, தயவையோ நம்பி இருக்கும் நிலை இந்திய அரசியலமைப்பில் இல்லை என்றும் மாறாக, ஒன்றியமும் மாநிலங்களும் தங்களின் அதிகார வரம்புகளுக்குள் இணைந்து செயல்படும் ஒரு கூட்டாட்சி அமைப்பையே அரசியல் அமைப்பு உருவாக்கி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
டெல்லியில் ஆட்சி செய்யும் கட்சியால் ஆளப்படும் மாநிலங்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தக் குடியரசையுமே ஒன்றிய அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய வரிவிதிப்பின் மூலம் திரட்டப்படும் நிதி ஒன்றிய ஆளும் கட்சிக்கானதல்ல, அது இந்திய ஒன்றிய அரசுக்கே சொந்தமானது, மக்கள் எப்படி வாக்களித்திருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குடியரசின் பெயராலேயே அவர்களிடம் வரிகள் வசூலிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி உள்ள எஸ்.ஒய்.குரேஷி, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு ஒரு மாநிலத்தை எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது என்பதன் அடிப்படையில் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையிலான நிதிப் பகிர்வு, மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு பாதகமாக அமையக்கூடும் என்பதால், இதுகுறித்து நிதி ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வளர்ச்சி என்பது அரசியல் சார்புடையதாக இருக்க கூடாது, மாறாக, அனைத்து மாநிலங்களையும் ஒவ்வொரு குடிமகனையும் சமமான நியாயத்துடன் நடத்தும் விதிகளின் அடிப்படையிலேயே அது அமைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ஒரே ரயிலை எத்தனை என்ஜின்கள் இழுத்துச் செல்கின்றன என்பதைவிட இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒன்றை என்ஜின்தான் மிகமுக்கியம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Also Read
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!