India
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
21-ம் நூற்றாண்டில் இருக்கும் சூழலிலும் பாஜக நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. அதனால்தான் நாட்டின் வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் மிகுந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக கருதப்படுகிறது. தென் மாநிலங்களில் முற்போக்கு சிந்தனைகள், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் நாட்டிற்கு முன்னோடியாக விளங்குகிறது.
எனினும் வட மாநிலங்கள் பின்னோக்கியே நகர்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் முன்னேறாமல் இருந்து வருகிறது. அங்குள்ள மக்கள் மத்தியில் கலாச்சாரம், ஆன்மிகம், வெறுப்பு உள்ளிட்டவைகளையே பாஜக விதைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது குழந்தைகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) டவுசர் அணியக்கூடாது என்று பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தின் கிராமம் ஒன்றில் கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாக்பத் (Baghpat) என்ற பகுதியில் உள்ள பட்டி மெஹர் என்ற கிராமத்தில் கடந்த டிச.27-ம் தேதி கிராம பஞ்சாயத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுவர், சிறுமியின் டவுசர் அணியக்கூடாது என்றும், செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் டவுசர் அணிவதால் கலாச்சாரம் சீர்குலைவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு சிறுவர்கள் குர்தாவும், சிறுமிகள் சல்வாரும் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிராம பஞ்சாயத்தின் இந்த தடையை யாரேனும் மீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமங் பஞ்சாயத்து தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முன்னேறி செல்லும் வேளையில், சிறுவர் சிறுமியர் டவுசர் அணியக்கூடாது என்று பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!
-
“வணிகர்களின் தோழன் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!