India
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், முதலமைச்சராக தேஜஸ்வி வருவார் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதனால் NDA கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடி, நிதிஷ்குமார், அமித்ஷா ஆகியோர் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
மேலும் NDA கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்துள்ளார். இதனால் எங்களுக்கு என்ன கிடைத்தது?, எங்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. எந்த அடிப்படை வசதியும் இல்லை என மக்கள் குற்றச்சாட்டுகனை வைத்து வருகிறார்கள். பா.ஜ.க கூட்டணிக்கு எங்கள் வாக்குகளை செலுத்த மாட்டோம் என துணிச்சலுடன், வாக்கு கேட்டு செல்லும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களிடமே தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் NDA கூட்டணி தோல்வி பயத்தில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஒன்றிய அமைச்சர் லாலன் சிங்கின் பேச்சு அமைந்துள்ளது. பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், ”பீகாரில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது” என வாக்காளர்களை மிரட்டியுள்ளார்.
இவரின் இந்த மிரட்டல் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து பீகார் மக்களுக்கு மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!